விஷப்பாம்பை கையில் ஏந்தி சொற்பொழிவாற்றிய பாதிரியாருக்கு நேர்ந்த கதி ( வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பை கையில் வைத்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்றிய பாதிரியாரை பாம்பு கடித்தும் முறையான வைத்திய சிகிச்சையை மறுத்தமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






அமெரிக்காவின் 125 தேவாலயங்களில் கடவுள் நம்பிக்கையை மக்கள் மத்தியில் வித்திடும் நோக்கில் பாதிரியார்கள் விஷப்பாம்பை கையில் வைத்து சொற்பொழிவாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.




கடந்த 2014ஆம் ஆண்டு ஜேமி கோட்ஸ் என்ற பாதிரியார் பாம்பை வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்றிய சந்தர்ப்பத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது.

இருந்தும் ஜேமி கோட்ஸ் வைத்திய சிகிச்சையை மறுத்து மலையுச்சியிற்கு கொண்டு செல்லுங்கள் நான் வாழ வேண்டுமா இல்லையா என்பதை கடவுள் முடிவ செய்யட்டும் என்று கூறி தொடர்ந்து சொற்பொழிவு செய்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.




இந் நிலையில் ஜேமி கோட்ஸின் மகனான கோடி கோட்சும் விஷப்பாம்பை கையில் ஏந்திய வன்னம் சொற்பொழிவாற்றியுள்ளார்.

சொற்பொலிவின் இடை நடுவே கோடியின் காதில் விஷப்பாம்பு கடித்துள்ளது.




விஷப்பாம்பு கடித்ததில் காதில் இரத்தம் வடிய வடிய கடவுள் இதை சரி செய்து விடுவார் என கூறிக்கொண்டே சொற்பொழிவை தொடர்ந்துள்ளார்.





சிறிது நேரம் செல்ல சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கோடியை வைத்தியசாலைக்கு செல்ல அழைத்துள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த கோடி தந்தை கூறியதைப் போன்று தன்னை மலையுச்சியிற்கு கொண்டு செல்லுங்கள் நான் உயிரோடு இருக்க வேண்டுமா? இல்லையா? என்பதை கடவுள் முடிவு செய்யட்டும் என கூறி வைத்தியசாலைக்கு செல்ல மறுத்துள்ளார்.






நேரம் செல்ல செல்ல அங்கிருந்தவர்கள் மத்தியில் அச்சம் குடி கொள்ளவே இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக கோடியை தூக்கிக் கொண்டு போய் வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் கோடிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக  காப்பாற்றப்பட்டுள்ளார்.







Previous Post Next Post