மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவுக்கு ஹோட்டலில் நடந்த தர்ம சங்கடம்! பரபரப்பான ஊழியர்கள்

மீசைய முறுக்கு படத்தை இளைஞர்கள், இளம் பெண்கள் அவ்வளவு எளிதாக மறந்து விடமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள்.துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் அவர் சந்தீப் கிஷணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 31 ல் இப்படம் வெளியாகவுள்ளது.

படப்பிடிப்பு சமயத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் பேய் இருப்பதாக பயந்துபோய் ஹோட்டல் ஊழியர்களை வரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தாராம்.

ஆனால் உண்மை என்னவெனில் சந்தீப், இந்திரஜித் ஆகியோர் ஆத்மிகாவின் அறையில் பேய் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அவரும் அப்படி செய்துவிட்டாராம்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தான் உண்மையை சந்தீப் கூறியுள்ளார்.
Previous Post Next Post