சுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை!!

யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று சுவிஸ்லாந்தில் வசித்து இளைஞன் ஒருவன் அங்கு சென்ற பின்னர் போதைக்கு அடிமையானான்.

கஞ்சாவும் கையுமாகவே அவனது வாழ்கை போய்க் கொண்டிருந்தது. தாடியோ தலை முடியோ வெட்டாத நிலையில் பைத்தியக்காரன் போல் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகிய நிலையில் அங்கு வாழ்ந்து வந்துள்ளான்.

அவனது நிலையைப் பார்த்த அங்கிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று நினைத்து கலியாணம் பேசியுள்ளனர்.
யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்யும் ஒரு யுவதியே இவனது ஜாதகத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்துள்ளது.

அந்த யுவதியை குறித்த இளைஞனுக்கு நிச்சயம் பண்ணியுள்ளனர். கலியாணம் தனக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதையிட்டு இளைஞன் கஞ்சா நினைவிலிருந்து மீண்டு கன்னி நினைவில் தவிக்க தொடங்கினான்.தொடர்ந்து குறித்த யுவதியுடன் வைபர், வட்ஸ்அப் மூலம் இரவு பகலாக தொடர்பு கொண்டிருந்தான்.

அவனது முகப்புத்தகத்தில் நல்ல பதிவுகளும் அவனது தெளிவான புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கின.

யுவதியுடன் கதைத்துக் கொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு திருமண நாளும் குறித்து விட்டனர். யாழ்ப்பாணம் வருவதற்கு அவன் ஆயத்தமாகியும் விட்டான்.ஆனால் அவன் யாழ்ப்பாணம் செல்லவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமண நாளும் கடந்து விட்டது.


மீண்டும் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பைத்தியக்காரன் போல் சுவிஸ்லாந்தில் திரியத் தொடங்கினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த இவனது நண்பர்கள் கலியாணம் ஏன் செய்யவில்லை. என்ன நடந்தது என்று இவனைக் கேட்டுள்ளனர்.

அதற்கு அவன் சொன்ன பதில் நண்பர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அவன் கூறிய பதில் இதுதான்.”நான் யாழ்ப்பாணம் செல்வதற்காக ஆயத்தமாகி தனது வருங்கால மனைவியிடம் உனக்கு என்ன வாங்கி வாறது என்று கேட்டேன்.

அவள் ஒரு பட்டியல் தந்தாள்.

அந்தப் பட்டியலில் உள்ள நகைகள், பொருட்களை வாங்குவதற்கும் அவள் சொன்னமாதிரி யாழ்ப்பாணத்தில் கலியாண வீடு செய்வதற்கும் எனக்கு குறைந்தது 50 ஆயிரம் சுவிஸ்பிறாங் (இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம்) தேவை.

அதோட எனது பெற்றோர், சகோதரிகள், உறவுகள் தமக்கு கொண்டு வரச் சொன்னவற்றுக்கும் கிட்டத்தட்ட அவ்வளவு காசு தேவை.இவ்வளவு பணத்தை செலவு செய்து கலியாணம் செய்து குடும்பம் நடத்துவதிலும் பார்க்க நான் கஞ்சாவோட குடும்பம் நடத்திப் போட்டுப் போறன்‘‘ என்று சொல்லிவிட்டு சென்றானாம் குறித்த யாழ்ப்பாணப் பெடியன்.

யாழ்ப்பாண கச்சேரியில வேலை செய்யிற அந்த தங்கச்சிக்கு இது சமர்ப்பணம். உன்னிடம் அகப்படப் போற அடுத்த அப்பாவி யார் என்று அறிய ஆசையாக இருக்கிறது தங்கச்சி.
Previous Post Next Post