கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

பெருநாள் விடுமுறைக்கு நுவரெலியா சென்று திரும்பிய குழுவினர் பயணித்த வான், பொலன்னறுவையின் மின்னேரியா பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த கதுறுவெல பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஏ.எம்இன்ஷாப் (வயது 28) மற்றும் இம்ஷித் (வயது 29) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை விபத்தில் காயமுற்ற ஐந்து இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post