தேனிலவில் மனைவி கொலை : கணவர், காதலருடன் உல்லாசம்!!

தென்னாப்பிரிக்காவில் தேனிலவை கொண்டாட சென்ற இடத்தில் மனைவியை துப்பாக்கி குண்டுகளுக்கு பறிகொடுத்த பிரித்தானிய தொழிலதிபர் தனது காதலருடன் வலம்வரும் தகவல் அணைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய தொழிலதிபரான ஷ்ரீன் தேவானி 2010 ஆம் ஆண்டு ஸ்வீடன் வாழ் ஏன்னி என்ற இளம் பெண்ணை இந்து முறைப்படி இந்தியாவின் மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தேனிலைவை கொண்டாடி வந்த தம்பதியை மர்ம கும்பல் ஒன்று தாக்கி ஏன்னியை மட்டும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய ஏன்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஷ்ரீன் தேவானி மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தேவானி விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் சமீபத்தில் தான் ஓரினசேர்க்கையில் நாட்டம் கொண்டவர் என அவர் முதன் முறையாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பில் ஏன்னியின் உறவினர்கள்,

“இத் தகவலை அவர் திருமணத்திற்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எங்களுடைய மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்க மாட்டோம் , அவர் எங்கள் மகளை கொலை செய்யவில்லை என்றே நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.இதனிடையே இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என தேவானி விடுவிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் காதலருடன் இனைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.


அது மட்டுமின்றி ஆனியை திருமணம் செய்து கொண்ட மும்பை நகரிலேயே தனது காதலருடன் தேவானி விடுமுறையை கழித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post