ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தின் விலையை கேட்டால் அசந்துடுவீங்க

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிர விலையை கேட்ட பலருக்கு தலைசுற்றிவிட்டது.கிட்டத்தட்ட ஹாலிவுட்டில் செட்டிலாகியுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸுக்கும் அண்மையில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

ப்ரியங்கா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ப்ரியங்கா சோப்ராவுக்கு ஆன்லைனில் ரசிகர் ஒருவர் வாழ்த்து தெரிவிக்க அவரோ நன்றி என்று பதில் அளித்தார்.


அதை வைத்து தான் ப்ரியங்காவுக்கு நிச்சயதார்த்தம் ஆனது உறுதி செய்யப்பட்டது. நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருக்கும் ப்ரியங்கா மீடியாவை பார்த்தால் கையை மறைத்துக் கொண்டு எஸ்கேப்


பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் பிறந்தநாள் பார்ட்டியில் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.


அப்போது அவரும், நடிகை ரவீனா டான்டனும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அந்த புகைப்படத்தில் தான் ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தை சரியாக பார்க்க முடிந்தது.

ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தில் இருப்பது 4 காரட் எடை கொண்ட வைரமாம். அதன் மதிப்பு ரூ. 1.4 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மனிஷ் மல்ஹோத்ரா பார்ட்டிக்கு வந்தவர்கள் ப்ரியங்காவின் மோதிரத்தை பார்த்து வியந்தனர்.


ப்ரியங்கா ஒரு ஜோடி செருப்பையே ரூ. 1.25 லட்சத்திற்கு வாங்குபவர். அப்படிப்பட்டவரின் நிச்சயதார்த்த மோதிரம் விலை உயர்ந்ததாகத் தானே இருக்கும்.
ப்ரியங்கா, நிக் ஜோனஸின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.ப்ரியங்கா சோப்ரா குடும்பத்தார் நிக் குடும்பத்தாரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இந்த வார இறுதியில் இரு குடும்பத்தாரும் நிச்சயதார்த்த பார்ட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிக் குடும்பத்தார் அமெரிக்காவில் இருந்து வரத் துவங்கியுள்ளனர்
Previous Post Next Post