கணவனை பாய்ந்து தாக்கி பந்தாடிய மனைவி….. !! கை முறிந்த நிலையில் மருத்துவமனையில் கணவன்….!! முல்லைத்தீவில் பயங்கரம்..!!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு 1ஆம் வட்டாரம் கைவேலிப்பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு உள்ளான கணவன் ஒருவர் கை முறிந்த நிலையில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் கைவேலிப்பகுதியிலுள்ள குறித்த குடும்பத்தில் ஏற்பட்டபிரச்சினை காரணமாக கடும் ஆத்திரத்துக்குள்ளான மனைவி, கணவன் மீது பாய்ந்து பாய்ந்து சரமாரியான தாக்குதலினை மேற்கொண்டுள்ளார்.

இதில் 33 அகவையுடைய இராமலிங்கம் ஜெயச்சந்திரன் என்ற குடும்பஸ்தர் ஒரு கை முறிந்த நிலையில் தலையில் காயங்களுடன் மாஞ்சோலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post