கொழும்பில் அதிர்ச்சி- எய்ட்ஸ் நோய் தாக்கத்துடன் பிடிபட்ட பெண்!

தெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் பார்லர் ஒன்றில் இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றை அண்மையில் பொலிஸார் சுற்றி வளைத்திருந்தனர்.
இதன்போது குறித்த மையத்தின் முகாமையாளரும், பிரதம பராமரிப்பாளர் உள்ளிட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் பெண்களில் ஒரு பெண்ணுக்கே இவ்வாறு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 6ஆம் திகதி இந்தப் பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர் இதன்போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு நீதவான் லோசன அபேவிக்ரம உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இந்த அறிக்கையில் குறித்த பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றில் முன்னிலையாகும் போது கௌரவமான ஆடைகளை அணிந்து வர வேண்டியது அவசியமானது என நீதவான் குறித்த பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
Previous Post Next Post