நடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி!!- வீடியோ

இன்று அதிகாலை நடிகர் விக்ரமின் மகன் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது கார் மோதியதில் ஆட்டோ நொருங்கி அதில் உறங்கியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்னை கமிஷ்னர் ஏகே விஸ்வாநன் அவர்கள் வீட்டருகே பள்ளத்தில் மோதி கார் நின்றுள்ளது.

காரில் இருந்த நடிகர் விக்ரம் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர்களை போலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தி பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.
குடிபோதையில் கார் ஓட்டி வந்தார்கள் என்பதை சோதிக்கும் பரிசோதனைகள் சம்பவ இடத்தில் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

காரணம் இரண்டு பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷ் ட்ரைவிங் பொதுமக்களுக்கு காயம் ஏற்படுத்துதல் என இரண்டு பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகரின் மகன் என்பதால் சலுகைகள் காட்டப்பட்டதா என சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் காவல்துறையை மிரட்டும் விதமாக காரில் வந்தவர்கள் பேசுகின்றார். மேலும் போலிசின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திடீர் என தப்பித்து ஓடுகின்றார்.

விக்ரம் தரப்பில் இது கவனக்குறைவால் நடந்த விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

”நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார். இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்”
Previous Post Next Post