லண்டனில் பட்டப்பகலில் வாளால் வெட்டிக்கொண்ட இளைஞர்கள்: சட்டத்தை கையில் எடுத்த பாதசாரிகள்

கிழக்கு லண்டனில் இளைஞர்கள் இருவர் வாளால் வெட்டிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் அப்பகுதி நபர்கள் சில துணிச்சலுடன் அவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.கிழக்கு லண்டனில் Upton Park ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தெருவில் இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பாதசாரிகள் மற்றும் அப்பகுதி கடைக்காரர்கள் துணிச்சலுடன் தலையிட்டு அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி தரியில் அவர்களை தள்ளிவிட்டு மேலும் சண்டையில் ஈடுபடாதவாறு அரண் அமைத்துள்ளனர்.

இதனிடையே ஷொப்பிங் முடித்து குடியிருப்பு திரும்பும் நபர் ஒருவர் இந்த களேபரங்களை கண்டு, உடனே அவரும் களத்தில் குதித்து உதவிக்கு முன்வந்துள்ளார்.

இளைஞர்கள் இருவரிடம் இருந்து வாளினை பறிப்பதே பெரும் பாடாக இருந்தது எனவும் அவர்களின் மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.அதில் ஒருவர் வாள்வெட்டு காயத்துடன் அவதிப்பட்டு வந்தவரை பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மதியம் ஒரு மணியளவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post