அடேங்கப்பா.! நம்ம அனுஷ்காவா இது? வெளிவந்த புகைப்படத்தால் அனுஷ்காவை தாறுமாறாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா.

 மேலும் இவர் நடித்த அருந்ததி, பாகுபலி ,பாகமதி போன்ற படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது.

இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்த அனுஷ்கா கையில் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை.

மேலும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன்பின் யோகா , ஒர்க்அவுட்,உணவு கட்டுப்பாடு என பலவற்றை பின்பற்றினாலும் உடல் எடை குறையாமல் அவதிப்படுகிறார் .

மேலும் பாகுபலி 2 படத்தில் கூட அவருக்கு கிராபிக்ஸ் செய்துதான்  இயக்குனர் ராஜமௌலி உடலை ஒல்லியாக காட்டினார்.

இந்நிலையில் 36  வயதை கடந்த அனுஷ்காவிற்கு திருமணம் முடிக்க வீட்டில் தீவிரமாக வரன் தேடி வருகின்றனர் மேலும் நல்ல வரன் கிடைப்பதற்காக அடிக்கடி கோவில்களுக்கும் சென்று பூஜை செய்து வருகிறார்கள் .அவ்வாறு இருக்கையில் பாகுபலி நாயகன் பிரபாஸ்க்கும், அனுஷ்காவுக்கும் காதல் எனவும் விரைவில் திருமணம் எனவும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன. ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அனுஷ்கா ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் சற்று எடை கூடி இருப்பது போல் உள்ளது .

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அனுஷ்காவா இது? எப்படி குண்டா இருக்கிறாரே என அவரின் உடல் தோற்றத்தை வைத்து கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் .
Previous Post Next Post