சாதி மறுப்பு, காதலை எதிர்த்த பெற்றோர்கள், இளம்ஜோடி எடுத்த வினோத முடிவு, பெருகி வரும் ஆதரவு.!- வீடியோ

பெங்களூரை சேர்ந்த இளம் காதல்ஜோடி ஒன்று தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் அவர்களை எதிர்த்து பேஸ்புக் நேரலையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்.இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கிரண்குமாரும் இரண்டாம் ஆண்டு பிபிஏ படிக்கும் அஞ்சனா என்ற பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதில் கிரண் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எனஅஞ்சனாவின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.மேலும் மதுரகிரி தொகுதியில் முக்கிய பதவியில் இருக்கும் அஞ்சனாவின் தந்தை கிரண்குமாரை மிரட்டி எச்சரித்துள்ளார்.இந்நிலையில் பெற்றோர்கள் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அஞ்சனா வீட்டை விட்டு வெளியேறினார்.மேலும் கிரண்குமாரும், அஞ்சனாவும் ஹெசரகட்டா பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்களது நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு அதனை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.Previous Post Next Post