கொழும்பில் காதல் மனைவியை தொலைத்துவிட்டு தேடும் கணவர்!

பதுளை, ஹாலி-எல, றொசைட் தோட்டம் இரண்டாம் பிரிவை சேர்ந்த தனது காதல் மனைவியை,  காணவில்லை என்று அவரின் கணவர் மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.





காதல் திருமணம் முடித்து, கொழும்பு மட்டக்குளிய இல. 47 ஜீ சமத்திபுர எனும் முகவரியில் இவர்கள் இருவரும் வசித்த வந்தனர்.

இவர்கள் இருவரும் வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்த வேளை, திடீர் என குறித்த பெண் காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 நாட்களாக அவரை காணவில்லை என கணவர் குறிப்பிட்டுள்ளார்.



குறித்த பெண்னை இனங்கண்டால் அருகாமையில் இருக்கின்ற பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மட்டகுளிய பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0703 397960, 0769 746545 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளியப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
Previous Post Next Post