மனைவியின் சிகிச்சைக்காக -குழந்தையை விற்க முயன்ற தந்தை!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவிந்த் பன்ஜாரா – சுக்தேவி தம்பதியினருக்கு 4 வயதில் ரோஷினி, ஒரு வயதில் ஜானு என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுக்தேவி மூன்றாவது முறையாக கர்ப்பமானார்.7 ஆ-வது மாதத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சிகிச்சைக்காக குருதி ஏற்பாடு செய்யும்படியும் கணவரிடம் கூறியுள்ளனர்.

ஏழ்மையில் இருக்கும் இவரால் சிகிச்சைக்காக குருதி ஏற்பாடு செய்ய முடியவில்லை. மனைவியின் சிகிச்சைக்கு பணமில்லாததால், வேறு வழியின்றி குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்த பொலிஸார், அந்தப் பெண்ணுக்கான சிகிச்சைக்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.

Previous Post Next Post