வவுனியா செட்டிகுளத்தில் காதலன் சடலமாக மீட்பு -காதலி தற்கொலை முயற்சி!

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா செட்டிக்குளத்தில் நேற்று (22.08.2018) மதியம் 1.00 மணியளவில் காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமையினையடுத்து காதலியும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் மெனிக்பாம் யுனிட்-2 இல் வசித்து வரும் 24 வயதுடைய கிருஸ்ணபிள்னை தினேஸ் என்ற இளைஞன் நேற்று மதியம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இவ் தகவலையறிந்த குறித்த இளைஞனின் காதலி நேற்று மாலை தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post