அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவனின் செயல்!!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கீரி கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மாணவனின் செயற்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கீரி கடற்கரையில் அதிகளவான பிளாஸ்ரிக் கழிவுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்ததுடன், கடற்கரை சூழலும் மாசடைந்திருந்தது.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவன் ஆர்.றொக்சன் இது தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்காக நேற்று மாலை கீரி கடற்கரைக்கு சென்றுள்ளார்.



இதன்போது கீரி கடற்கரை பகுதியில் கரையொதுங்கி காணப்பட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சேகரித்து ஒரு இடத்தில் குவித்துள்ளார்.

பின்னர் மன்னார் நகரசபையுடன் தொடர்பு கொண்டு தான் சேகரித்த கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறும் கோரியுள்ளார்.

கீரி கடற்கரையில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமையினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.










Previous Post Next Post