யாழில் நடந்த கொடூரம்!! குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது!

யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்கள் பிரச்சாரங்களை செய்வதாக இலங்கை காவல்துறை சப்பைகட்டு கட்டி வருகின்றது.

இந்நிலையில் உடுப்பிட்டி வாசிகசாலைப்பகுதியில் வயோதிப குடும்பம் மீது கொள்ளையர்கள் நடத்திய வாள் வெட்டினால் இரு பார்வையினையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.



யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வயோதிப பெண்மணி கொள்ளையர்களை அடையாளம் கண்டிருந்த நிலையில் அவரது இருகண்களையும் கூரிய ஆயுதங்களால் கொத்தியதால் அவர் பார்வையினை இழந்துள்ளதுடன் தொடர்ந்தும் உயிருக்கு போராடிவருகின்றார்.

கொள்ளையர்கள் வாள்வெட்டினில் வயோதிப தம்பதிகளை தாக்கி படுகாயப்படுத்தியிருந்த நிலையில் காலை வரை இரத்தம் பெருக்கோட அவர்கள் மயக்க நிலையிலிருந்துள்ளனர்.

அப்போது பூக்கள் சேகரிக்க வந்த அயலவர் ஒருவரே அவர்களை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Previous Post Next Post