“காலியில் வௌிநாட்டு யுவதியை மறைந்திருந்து கற்பழித்த இளைஞர்கள்”

காலியில் பீச் பார்ட்டி நிறைவடைந்து தன்னுடைய விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதியை பாலியல் வன்முறைக்குட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.



காலி உனவட்டுன கடற்கரை களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அதிகாலை 2 மணியளவில் காலி நகரிலிருந்து விடுதிக்கு நடந்து சென்றுக்கொணடிருக்கையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த சிலர் குறித்த யுவதியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த யுவதி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதோடு தலைமறைவாகியவர்களை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post