பெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி!

வவுனியாவில் வித்தியாசமான முறையில் ஆடை அணிந்துசென்ற குடும்பப் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



வவுனியா வைத்தியசாலையில் வைத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த குடும்பப் பெண் அணிந்திருந்த ஆடையில் பௌத்த விகாரை போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருந்தமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post