விமானப் பயணத்தின் இடையே மது அருந்திய தாயார் ஒருவர் தனது 4 வயது மகளுடன் டுபாயில் சிறைவாசம் அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன் ( 44) பல் மருத்துவர் . இவர் கேட்விக் விமான நிலையில் இருந்து கடந்த ஜூலை 13 ஆம் திகதி மருத்துவர் எல்லி தமது 4 வயது மகளுடன் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளார்.

அவருக்கு உணவுடன் ஒரு கோப்பை திராட்சை மது வழங்கப்பட்டுள்ளது. டுபாயில் தரையிறங்கியதும் பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அவரது விசாவானது காலாவதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர் மது அருந்தியுள்ளதாகவும், அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிறையில் இருந்த 3 நாள்களும் போதிய உணவு, மாற்று உடை என எதுவும் வழங்கப்படவில்லை எனவும், கழிவறை கூடச் சுத்தமாக இல்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 3 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் எல்லி குழந்தையைக் கணவரிடம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். விசாரணை முடியும் வரை எல்லி டுபாய் விட்டு வெளியேற முடியாது என்பதால் தமது நண்பர்களுடன் தற்போது தங்கி வருகிறார்.