கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி!! (படங்கள்)

கிண்ணியா – மஹமாரு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா மஹமாரு கிராமத்தை பிறப்பிடமாகவும், கிண்ணியா குட்டிக்கராச்சை வசிப்பிடமாகவும் கொண்ட அலிக்குட்டி என்பவரே இதில் கொல்லப்பட்டுள்ளார்.

மஹமாரு மையவாடிக்கருகாமையில் மது போதையில் ஏற்பட்ட கருத்து மோதல், பின்னர் கைகலப்பாக மாறி இந்த கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பிரேர பரிசோதனை அறைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post