திருமண வீட்டில் ஏற்பட்ட வன்முறை : காதினை கடித்து துண்டாக்கிய இராணுவ சிப்பாய்!!

திருமண வீட்டில் இராணுவ கொப்ராலின் காதை மற்றொரு கொப்ரால் கடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டவெஹேர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இராணுவ கொப்ரால்களும் விசேட விருந்தினர்களாக திருமண வீட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் போது தகராறு ஒன்று ஏற்பட்டு, இறுதியில் காதை கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மிகவும் கடுமையாக காது கடிக்கப்பட்டமையினால், காது துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துண்டிக்கப்பட்ட காதினை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் இணைப்பதாக வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மற்றைய கொப்ராலை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Previous Post Next Post