சாதனை படைத்தது சர்கார்!!

கேரளாவில் பாகுபலி படத்துக்கு பின் அதிக விலைபோன படம் என்ற பெருமை பெற்றுள்ளது விஜய்யின் சர்கார் படம்.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் மாறன் மிகப்பெரிய பொருள்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், படத்தின் இசை காந்தியின் பிறந்த நாளான ஒக்ரோபர் 2 ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியிலும் சர்கார் பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post