வவுனியா உக்கிளாங்குளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன் – நடந்தது என்ன?

வவுனியா உக்கிளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் இந்த சம்பவம் நேற்றைய தினம்(24.08.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
வவுனியா உக்கிளாங்குளம் முதலாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றை சுத்த படுத்தும் நோக்கில் வீட்டில் வதியும் 20வயதுடைய இளைஞன் கிணற்றினுள் இறங்கி சுத்தம் செய்துவிட்டு கிணற்றின் மேல் பகுதிக்கு ஏற முற்பட்டபோது கிணற்றின் மேல் பகுதியினை அடைந்த போது கை நழுவியதில் கிணற்றின் மேல் பகுதியிலிருந்து 30 அடி உயரமான பகுதியிலிருந்து கீழே விழுந்துள்ளார்
விழுந்ததும் சுயநினைவை இழந்துள்ளார் எனினும் கிணற்றருகே நின்ற குடும்பத்தினர் கூச்சலிடவும் அயலவர்கள் விரைந்து இளைஞனை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் கிணற்றினுள் இருந்த இளைஞனுக்கு முதலுதவி வழங்கி இளைஞனை சுயநினைவுக்கு கொண்டு வந்தனர்



இளைஞர்கள் ,அயலவர்கள் அனைவரும் ஒன்றினைந்து இளைஞனை மரநாற்காலி ஒன்றில் அமர்த்தி அதனை கயிறு மூலம் கட்டி தூக்கி மேற்பகுதிக்கு கொண்டு வந்து இளைஞனை மீட்டனர்
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர அழைப்பு (1990) அம்பியூலனஸ் வண்டி மூலம் பாதிக்கப்பட்ட இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post