திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மரணமடைந்த மணப்பெண்: கதறிய காதலன் (படங்கள்)

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி மரணமடைந்த சம்பவம் அவரது காதலனை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.



ஹெனான் மாகாணத்தில் உள்ள Zhengzhou நகரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் Xiao Hui.

நோய் தாக்கம் அதிகரித்ததால் தமது காதலியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் யாங் ஃபெங் என்ற இளைஞர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தமது விருப்பத்தை தெரிவித்து சம்மதம் பெற்றுக் கொண்ட யாங் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடித்துள்ளார்.

தமது காதலியால் எழுந்து நடக்க முடியாது என்பதால் திருமண சடங்குகளை மருத்துவமனையில் வைத்தே நடத்தவும் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் அழைத்துக் கொண்டு யாங் மருத்துவமனை சென்றுள்ளார்.




திருமண கோலத்தில் இருந்த யாங், தமது காதலி அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சென்று சடங்குகளை தொடங்கவிருந்த சில நிமிடங்களில் அவர் மரணமடைந்ததாக தெரியவந்தது.





கண்ணீருடன் அறைக்கு வெளியே வந்த யாங், தமது காதலி இறந்த தகவலை காத்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

32 வயதாகும் Xiao தமது 24 வயதில் இருந்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.





2 ஆண்டுகளுக்கு முன்னர் Xiao-ஐ யாங் சந்தித்துள்ளார். சந்திப்பு நடந்த சில நாட்களிலையே தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை யாங்கிடம் தெரிவித்துள்ளார்.

முதலில் பரிதாபப்பட்ட யாங் பின்னர், தமது வாழ்க்கையின் முக்கிய தருணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதி Xiao-விடம் தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.





மட்டுமின்றி தமது ஊதியத்தில் 80 விழுக்காடு பணத்தையும் காதலியின் சிகிச்சைக்கு என செலவிட்டும் வந்துள்ளார்.

இச்சம்பவம் இணையத்தில் வெளியாகவே, பலரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். உண்மை காதல் இதுவென புகழ்ந்தும் வருகின்றனர்.
Previous Post Next Post