சிங்கள அழகியால் சிக்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கு விதிகளை மீறி, தவிசாளர் பதவிக்காக எந்த எல்லைவரையும் போவேன் என்று காண்பித்த வலி.தெற்கு பிரதேசசபையின் உறுப்பினராக இருந்த ஜி.பிரகாஷை கட்சியை விட்டே ஒரேயடியாக விலக்கியுள்ளது தமிழரசுக்கட்சி. தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலின் போது, வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் பதவி புளொட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், முன்னர் தவிசாளராக பதவிவகித்த ஜி.பிரகாஷ், மீண்டும் தவிசாளர் பதவிக்காக இரகசிய சதி முயற்சிகளில் இறங்கினார்.

இதை அப்பொழுதே- முதன்முதலில்- வெளிப்படுத்தி, கட்சி தலைமையின் கவனத்தையும் அந்த விடயத்தில் ஈர்க்க வைப்பதில் தமிழ்பக்கம் முக்கிய பங்காற்றியிருந்தது.

தவிசாளர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என பிரகாஷிடம் நேரிலும், தொலைபேசி மூலமும் பல தடவைகள் மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலமுறை அறிவுறுத்தியும் கேளாமல், பதவிக்காக கட்சிக்கட்டுப்பாட்டை கருத்திலெடுக்க மாட்டேன் என்ற பாணியில் செயற்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் பிரகாஷை தவிசாளர் ஆக்குவதில் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் பின்னணியில் செயற்பட்டார். எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இந்த சதி முயற்சியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தவிசாளர் தெரிவிற்கு நேரில் சென்று, கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்தியது. இதனால் பிரகாஷ் தரப்பின் சதி முயற்சி வெற்றியளிக்கவில்லை.



இதையடுத்து, கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதற்காக விளக்கமளிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளர் க.துரைராசசிங்கம் அவருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழக்கினார். இந்த சமயத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயற்பாடுகளை சரவணபவன் அணி மேற்கொண்டது.

கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவரை சரவணபவனின் உதவியாளர், மாவை சேனாதிராசாவின் மகன், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். “ஒழுங்காற்று நடவடிக்கை ஒரு பக்கமாக நடக்கட்டும். இளைஞரணியில் சேர்ந்து வேலை செய்வோம்“ என பேசியிருந்தனர்.

இளைஞரணி முயற்சிகள் பிசுபிசுத்த நிலையிலும், கட்சி செயலாளர் விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு சில மாதங்களாகியும் பதில் கொடுக்காத காரணத்தாலும், தற்போது ஜி.பிரகாஷ் கட்சியை விட்டும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.



இதேவேளை, கட்சியினால் நீக்கப்படக்கூடும் என்ற முன்யோசனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்புடன் பிரகாஷிற்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள். எனினும், அந்த இரண்டு தரப்பும் அவரை நிராகரித்து விட்டனர்.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர், யாழ் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் சிங்கள அழகியை மருதனார்மடத்திற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து, பேசப்பட்ட பணத்தை கொடுக்காததால் அழகி ஆர்ப்பாட்டம் செய்து, பொலிஸ் வரை விவகாரம் சென்றதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.



இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே மேற்படி இரண்டு கட்சிகளும் அவரை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய பிரகாஷ் பேச்சு நடத்தி வருவதாக அறிய முடிகிறது.
Previous Post Next Post