கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இனங்காணப்பட்டார்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்தவர்.

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு
முறுகண்டி சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனா இருந்ததால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட எமது பிராந்திய செய்தியாளர் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் சேர்ந்துகிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் இன்று வருகை தரவில்லை என வினவிய பொழுது

அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் குறித்த ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post