பரிட்சையில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால் படுக்கையை பகிரு..12 ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்..!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக வற்புறுத்தியதாக தனியார் ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் தான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது, குறித்த பள்ளியில் பணியாற்றி வரும் பிரவீன் சூர்யவன்ஷி மற்றும் சக்கின் சோனாவனே என்ற இரு ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் நீ பரிட்சையில் தேர்ச்சியடைய வேண்டுமென்றால் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

இதனால், செய்வதறியாது பயந்து போன மாணவி தன் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கூறியதை சொல்லி நான் இனி பள்ளிக்குச் செல்ல மாட்டேன் எனக் கதறி அழுதுள்ளார்.

இதனால், பதறிப்போன பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், கல்லூரி ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்கள் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Previous Post Next Post