வவுனியாவில் 15வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்- இளைஞன் கைது!

வவுனியாவில் 15வயது சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞன் கைது.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துக்கொண்டு அனுராதபுரம் பகுதியில் இருவரும் தங்கியிருந்துள்ளனர்.
சிறுமியின் உறவினர்கள் இவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து அனுராதபுரம் சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளதுடன் நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமது மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு ஒன்றினையும் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று வவுனியா சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய சிவராசா கிருஸ்ணராசா என்ற இளைஞனைக் கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post