அராலிப்பகுதியில் 150 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது

அராலிப்பகுதியில் 150 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வட்டுக்கோட்டை பொலீஸ்பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கிரி பகுதியில் 150 லீற்றர் கோடா மற்றும் 60லீற்றர் கசிப்புடன் சுழிபுரம் பகுதியை  சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த உபகரணங்களும் வட்டுக்கோட்டை பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது வட்டுக்கோட்டை பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது அதனை தடுத்து நிறுத்த பொலீசார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலீசாரினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Previous Post Next Post