இலங்கையில் திகிலூட்டும் கிராமம் : தொடர்ந்து 15 மரணங்கள் : அடுத்த மரணத்தை எண்ணி பீதியில் மக்கள்!!



அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

கிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்திற்கு சொந்தமான பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகிறது.

கலேன்பிந்துவெவ, ஹல்மில்லவெவ என்ற பெயர் கொண்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களில் மாத்திரம், ஒருவர் உயிரிழந்து 21 வது நாட்களில் மற்றுமொருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை, அமானுஷ்ய சக்தியாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

21 நாட்களுக்கு ஒரு முறை உயிரிழக்கும் 15 பேர் ஒரே வரிசையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியாக நபர் உயிரிழந்து 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது பொது மக்கள் பீதியில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், அந்த கிராமத்தில் உள்ள ஏரி, கங்கைகளில் நீர் வற்றிப் போயுள்ளது. இதன் காரணமாக மக்கள் இன்னும் அச்சம் கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post