அண்ணனின் 15 வயது மகளை திருமணம் செய்த சித்தப்பா..!


புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 வயது மகளை கடத்தி திருமணம் செய்த சித்தப்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோதிலட்சுமி - கங்காதரன் தம்பதியினரின் 15 வயது மகள் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி பள்ளி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.

இதனைத்தொடர்ந்து பொலிசார் மாணவியை தேடிவந்த நிலையில், சிறுமியின் சித்தப்பா ரமணிதரன் என்பவர் மாணவியை மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக மாணவி மீட்கப்பட்டு தாய் ஜோதிலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சித்தப்பா ரமணிதரனை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Previous Post Next Post