2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தது எதற்காக? உருக்கமான கடிதம் சிக்கியது

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.மகேந்திரன் திருப்பூரில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமானதால் மருத்துவ சிகிச்சை எடுபடாமல் போனது.
மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

மகேந்திரன் தான் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள நாதியில்லாமல் தனியாகி விடுவார்கள் என விரக்தியடைந்துள்ளார்.

இந்நிலையில் தான் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் மகேந்திரன் எழுதிய கடிதம் சிக்கியது,

மகேந்திரன் எழுதிய கடிதத்தில், மஞ்சள் காமாலை நோய் தீவிரமாகி ரத்தத்துடன் சேர்ந்ததால் இனி பிழைக்க மாட்டேன் என தெரிந்தது.

நான் இறந்துவிட்டால் என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லை என்ற காரணத்தினால் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கொடுத்தேன்.
அதன்பிறகு நான் தூக்கிட்டு கொள்கிறேன். எங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post