
பேரூந்து பயண கட்டணமானது நாளை(20) நள்ளிரவு முதல் நான்கு வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த பட்ச கட்டணமான 12 ரூபாவில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூந்து பயண கட்டண அதிகரிப்பு தொடர்பில் தனியார் பேரூந்து சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையில் இன்று(19) காலை கலந்துரையாடல் இடம்பெற்ற போதே இந்த பயண கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.