அரை மணி நேரத்­தில் 22 பவுண் நகை களவு -சுழி­பு­ரத்­தில் சம்­ப­வம்!!

யாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

Previous Post Next Post