கணவர் இறந்துவிட்டதால் பாலியல் தொழிலுக்கு வந்த 2 குழந்தைகளின் தாய்! நடந்த விபரீத சம்பவம்


தமிழகத்தில் உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணை போதையில் இருந்த கும்பல் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போடியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே மாணவர் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்ணின் உடலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்ததால், பொலிசார் அப்பகுதிக்கு மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.


அதன் பின் அருகில் இருப்பவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கூடலூரைச் சேர்ந்த கண்ணன் மனைவி முருகேஸ்வரி(30) என்பது தெரியவந்துள்ளது.

கண்ணன் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், முருகேஸ்வரி தனியாக தன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கிடைக்கும் வேலையை செய்து வரும் இவர், போடி மற்றும் சில்லமரத்துப்பட்டியில் தங்கி பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இவர் மீது காவல்நிலையத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சம்பவம் நடந்த இடத்திற்கு முருகேஸ்வரியை உல்லாசமாக இருப்பதற்காக சிலர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மறுத்துள்ளார். இதனால் போதையில் இருந்த அந்த நபர்கள் முருகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்பநாய்கள் சுமார் 2.கி.மீற்றர் தூரம் சென்று நின்றுள்ளது. இதையடுத்து கொலையாளி யார் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post