அழகாக நடந்த காதல் திருமணம்: மனைவிக்கு ஏற்கனவே 3 திருமணம் ஆனதை அறிந்து அதிர்ந்த புதுமாப்பிள்ளை

தமிழ்நாட்டின் மதுரையில் ஆண்களை மயக்கி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

பிரதீப் என்ற இளைஞர் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் திடீரென வீட்டில் இருந்த புவனேஸ்வரி 2½ பவுன் நகையுடன் மாயமானார்.

இது குறித்து பிரதீப் பொலிசிடம் புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணை செய்தனர். அதில், புவனேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருப்பது தெரிய வந்தது.

அவர் ஆண்களை தனது அழகில் மயக்கி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதில் கடைசியாக பிரதீப் அவரிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆரோக்கியம்மாள் ஆகியோரை பொலிசார் தேடி வருகிறார்கள்.


Previous Post Next Post