
சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
செல்லதுரை என்பவர் தன்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய தீபா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டில் விருந்து உபசரிப்புகள் தடபுடலாக இருந்தது.
கணவன் வீட்டுக்கு சென்ற தீபா, அங்கு கழிப்பறை வசதி இல்லாததைக் கண்டு அவருடைய மனைவி மன உளைச்சலுக்கு ஆளானார். கழிப்பறை இல்லாத வீட்டில் என்னால் ஒருநாள் கூட வாழ முடியாது என்று கணவரிடம் அழுது புலம்பினார்.
அன்றே, தனது தாய் வீட்டுக்கு கிளம்பிவிட்டார். அன்று மாலையில் மனைவியை அழைத்து வர செல்லதுரை தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவரை எவ்வளவோ சமாதானம் செய்தும், கழிப்பறை கட்டி முடிக்கும் வரை தன்னால் அங்கு வர முடியாது. கழிப்பறை கட்டிய பிறகு வந்து அழைத்துச்செல்லும்படி கூறி செல்லதுரையுடன் செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் மனம் உடைந்த செல்லதுரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது.
அதில், 'அம்மா, அப்பா மன்னிக்கவும். தவறு செய்து விட்டேன். தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மனைவி மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள்,'' என்று எழுதி வைத்திருந்தார்.
சடலமாகக் கிடக்கும் மகனைப் பார்த்து, நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.