வெளிநாட்டில் இருந்து யாழ் சென்று பரிதாபமாக பலியான 4 பேர்...! (படங்கள்)

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலையில் விபத்திற்கான காரணம் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து யாழ் சென்றவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்தில் சுவீடன் நாட்டு பிரஜையான 30 வயதான கமலநாதன் சிவரஞ்சனி, நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 32 வயதான காண்டீபன் யமுனா ரஞ்சனி, 56 வயதான இசை ஞானவதி யோகரத்னம், 13 வயதான காண்டீபன் டிசாலினி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து காரணமாக சுவீடனை சேர்ந்த 34 வயதான ஜேம்ஸ் கமலநாதன் மற்றும் ஆறு வயதான கமலநாதன் ஜெசிகா படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனம் ரயில் பாதுகாப்பு வீதியில் நுழையும் போது, வாகனத்தின் இயந்திரம் இயங்காமல் போயுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் கார் மோதுண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

ரயிலில் மோதுண்ட வாகனம் சுமார் 250 மீற்றர் தூரம் இழுத்து சென்று வீதிக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post