‘5 மாத்திர குடுத்திருக்கேன்; தூங்கறமாதிரி தான் தெரியுது;குழந்தைகளை கொன்றதும் கள்ளக்காதலனுடன் போனில் அபிராமி பேச்சு!! (video)

பெட்சீட் போர்த்தி வச்சிருக்கேன்… ஓடிப்போயிறலாமா?’ வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘திகில்’ உரையாடல்சென்னை: பாலில் தூக்க மாத்திரைகளை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்பு அபிராமி தனது கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய்(30). இவரது மனைவி அபிராமி(26) இவர்களுக்கு அஜய்(7), கார்னிகா(4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அபிராமிக்கு குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் வேலை செய்யும் சுந்தரம்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அபிராமி தனது கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டு, தன் இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

குழந்தைகளை கொலை செய்த பின் அன்று இரவு (30ம்தேதி) இரவு அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ்அப்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடல் விவரம் வருமாறு:

சுந்தரம்: ஹலோ.. என்னாச்சி?

அபிராமி: குழந்தைங்க இரண்டு பேருக்கும் பால்ல 5 தூக்க மாத்திரை கலந்து குடுத்திருக்கேன். அவங்க நல்லா தூங்கற மாதிரி தான் இருக்கு. பெட்சீட் போத்தி வைச்சிருக்கேன்..

சுந்தரம்: செத்துட்டாங்களா?….

அபிராமி: 5 மாத்திர போட்டிருக்கேன்.. ஆனா தூங்கற மாதிரி தான் இருக்காங்க..

சுந்தரம்: என்ன பயமே இல்லாம பேசுற.. எனக்கே பயமா இருக்கு.. சரி இப்ப என்ன பண்ணலாம்.

அபிராமி: என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல.. இரண்டு பேரும் எங்காவது ஓடி போயிரலாமா..

சுந்தரம்: ஓடி போறதுக்கு தானே இந்த பிளான் பண்ணேன். ஹவுஸ் ஓனர் இருக்காங்களான்னு பாரு.

அபிராமி: ராத்திரி 11 மணி ஆவுது. அவங்க யாரும் இருக்க மாட்டாங்க.

சுந்தரம்: யாருமே இல்லல வெளிய..

அபிராமி: யாரும் இல்ல…

சுந்தரம்: எனக்கும் ஓட்டல்ல வேலை முடியப் போகுது. முடிஞ்ச உடனே வர்றேன். உன் வீட்டுக்காரர் வருவாரா இப்போ.

அபிராமி: வருவாரான்னு எனக்கு தெரியலயே..

சுந்தரம்: வரலன்னா எனக்கு போன் பண்ணு. நான் சொல்ற இடம் வந்திரு. நாம காலைல ஓடி போயிரலாம்.

அபிராமி: அப்படியே செய்றேன்..

சுந்தரம்: கேக்குதா இல்லையா..

அபிராமி: ஆம் கேக்குது.

சுந்தரம்: பயப்படாத.. லைட் லாம் ஆப் பண்ணி வை.. திரு திருன்னு முழிக்காத…
அபிராமி: ஊம் சரி…
இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.


Previous Post Next Post