
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்யா - சுந்தரராஜன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் இருந்து இருவருக்கும் மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மாப்பிள்ளை சுந்தரராஜன் தற்கொலைக்கு முயற்சித்தார். சுந்தரராஜனை, அவரது பெற்றோர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் நித்யாவும் தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதனால், நித்யாவின் தந்தை மணமக்கள் இருவரையும் தனது வீட்டில் அழைத்து சென்று வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற நித்யா விஷம் அருந்தியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். கொண்டு செல்லும் வழியிலேயே நித்யா உயிரிழந்துள்ளார்.
இதனைதொடர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடமும், நித்தியாவின் குடும்பத்தாரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.