
திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த 6 வெளிநாட்டவர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், உயிர் பாதுகாப்பு பிரிவின் 3 பொலிஸ் அதிகாரிகளால் காப்பற்றப்பட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட ஆறு பேரில் இந்தியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தையொன்று உள்ளிட்ட 4 பெண்களும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆணொருவரும் , காணப்படுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
அலையில் அள்ளுண்டுச் சென்ற இவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கூச்சலிட்டதையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரிகள் நீந்திச் சென்று காப்பாற்றி, படகு ஒன்றின் மூலம் இவர்களை கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
நிலாவெளி கடற்கரை ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள வந்தவர்களே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.