ஆறு வயதுச் சிறுமியின் கையைப் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் 70 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவற்குழியில் வீதியில் நடந்து சென்ற சிறுமியின் கையை தவறான நோக்கத்துடன் முதியவர் பிடித்து இழுத்தார் என்று சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் முதியவரைக் கைது செய்து நேற்றுமுன்தினம் சாவகச்சேரி பதில் நீதிவானிடம் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் முதிவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படவில்லை என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.