யாழ் A9 வீதியில் விபத்து குடும்பஸ்தர் பலி! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள ஏ9வீதியின் இராமாவில் பகுதியில் காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லான்ட்மாஸ்ரருடன் ஏ9வீதியில் இருந்து வந்த ஹயஸ்வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

லான்ட்மாஸ்ரர் வாகனத்துடன் ஹயஸ் ஒன்று பின்பக்கமாக மோதியதில் குறித்த லான்ட்மாஸ்ரர், வாகனத்தில் இருந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சரசாலை வடக்கு பகுதியில் வசித்துவரும் க.விக்கினேஸ்வரன் என்பவரே சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் பின்பக்கமாக மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.



மேலும் குறித்த விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







Previous Post Next Post