பண்டுவஸ்நுவர, ரத்முளுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் விகாரைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (07) மாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மூனமல்தெனிய, துனகயாவத்த பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் உள்ள அனைவரும் அநுராதபுரம் பகுதிக்கு யாத்திரை சென்றிருந்த வேளையில் குறித்த மாணவி தனது காதலன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் ரத்முளுகந்த விகாரையில் உள்ள மலை உச்சிக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மலை உச்சிக்கு செல்லும் பாதை அதிக சறுக்கலுடைய பாதையாக இருந்ததால் மோட்டார் சைக்கிள் சறுக்கி பள்ளத்தில் விழுந்துள்ளது.
பின்னால் வந்த நண்பர்கள் இந்த சம்பவத்தை கவனிக்காது அவர்களை கடந்து சென்று பின்னர் மலை உச்சியை அடைந்ததும் அவர்களுக்கு முன்னால் சென்றவர்கள் பள்ளத்தில் விழுந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த மாணவியை குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்த செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.