காப்பாற்ற வந்த கை- பரபரப்பான கேரளா!!

வெள்ளத்தில் கை போன்று ஒரு மர்ம பொருள் காணப்பட்டதால், அதனைக் கண்ட மக்கள் கடவுளின் கை தம்மைக் காப்பற்ற வருவதாக எண்ணி மகிழ்ந்தனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் பதிவாகியுள்ளது.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள நதி ஒன்றில் ஒரு பெரிய கை போன்ற பொருள் வெளிவந்துள்ளது.அதனை அவதானித்த அங்கிருந்த மக்களில் சிலர் இது கடவுளின் கை எனவும், வெள்ளத்திலிருந்து நம்மளைக் காப்பாற்றவே அவர் வந்துள்ளார் என்றும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அதைச் சற்று அருகில் சென்று பார்த்த போது, அது கை வடிவில் உள்ள பாறை என்பது தெரியவந்தது.
Previous Post Next Post