இரண்டு பிள்ளைகள்! ஒரு காதல்!! பிறிதொரு கள்ளக் காதல்!!!

தெதிகம பெலிகலை மெட்டியன பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான ரேணுகா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் முதலாவது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :- 9 வருடங்களுக்கு முன்னர் ரேணுகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இரு பிள்ளைகளின் செலவினங்களுக்காக வெளிநாடொன்றுக்கு பணிப்பெண் வேலைக்கு சென்றுள்ளார்.

இரண்டு வருட ஒப்பந்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மீண்டும் நாட்டிற்கு திரும்பிய ரேணுகா தனது பிள்ளைகளில் மூத்த புதல்வர் யுவதி ஒருவரை காதலிப்பதை அறிந்துக்கொண்டு அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

சிறிது காலத்தில் இரு பிள்ளைகளின் தாயான ரேணுகாவிற்கும் பிரிதொரு காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபருடன் நெருக்கமாக பழகுவதும் அவருடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடுவதுமாக இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே ரேணுகாவிற்கு இன்னுமொரு நபருடனும் காதல் தொடர்பு காணப்பட்டுள்ளது.

இந்த தொடர்பினை ஏற்கனவே காதலித்துக்கொண்டிருக்கும் நபர் அறிந்துக்கொண்டுள்ளார். பல தடவைகள் ரேணுகாவை அச்சுறுத்தியுள்ளதோடு, ரேணுகாவின் உறவினர்களும் குறித்த தொடர்பினை துண்டித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வழமையை போன்று ஒரு தினம் அனைவரும் தொழிலுக்கு சென்ற நிலையில் ரேணுகா மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார்.

மகன் தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ரேணுகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் முதலாவது காதலனே இவ்வாறு கொலை செய்துள்ளார் என கண்டறித்துள்ளனர்.அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர் வழங்கிய வாக்குமூலத்தில் :- நான் ரேணுக்காவுடன் நெருங்கிய நட்பினை கொண்டிருந்தேன், ரேணுகாவிற்கு பல இலட்சம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளேன்.

ஆனால் ரேணுகா பிரிதொரு நபருடன் காதல் கொண்டமை தனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகையினாலேயே கழுத்தறுத்து கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post