இலங்கையில் மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட மர்மத் தீவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் உள்ள மாந்தீவு பகுதிக்கு மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் செல்வதாக இருந்தால் சுகாதார அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு வாவிக்கு நடுவே காணப்படும் மாந்தீவில் அப்படி என்ன இருக்கிறது.சுமார் 96 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அந்த தீவில்தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான தொழு நோயாளர் பிரிவு உள்ளது

அங்கு செல்ல வேண்டுமாக இருந்தால் படகில்தான் பயணிக்க வேண்டும்.மூன்று கட்டிடங்களைக் கொண்ட குறித்த தீவில் உள்ள தொழுநோயாளர் பிரிவில் ஒரே ஒரு நோயாளர் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளார்.

அங்கு 251 கட்டில்கள் உள்ளன ஒரு நோயாளரை பராமரிப்பதற்கு 27 பேர் பணிவுரிவதாக தெரியவந்துள்ளது.குறித்த தீவு முழுவதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வைத்தியசாலை நிர்வாகம் செய்யும் வேலை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகளை சூழல் பாதுகாப்புக்கு தீங்கு ஏற்படாதவாறு அழிக்க முடியாது நிர்வாகம் தடுமாற்றம் அடைந்துள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் மண்முனை வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் கடந்த காலங்களில் எரிக்கப்பட்டு வந்த நிலையில் மண்முனை பகுதி மக்கள் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டதையடுத்தே கழிவுகள் அப் பகுதியில் கொட்டப்பட்டு எரிப்பது நிறுதப்பட்டது.

இதனையடுத்தே வைத்தியசாலைக் சத்திர சிகிச்சை கழிவுகள் கடந்த சில வாரங்களாக வவுணதீவு வரை லொறியில் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் படகில் மாந்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுந்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.












Previous Post Next Post