பெண் ஆசிரியரை ஆபாசமாக படம் பிடித்து அவருக்கே அனுப்பிய மாணவன்!

ஆசிரியை ஒருவரை மாணவன் ஆபாசமாக படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அவருக்கே அதை அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாலா என்ற ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசியராக உள்ளார்.

இதே பள்ளியில் தோப்பு பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறான். மாணவனின் பெயர் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் அந்த மாணவன் ஆசிரியரான மாலாவை காதலிப்பதாக தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளான்.ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளான்.

தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான்.

ஆசிரியை கண்டித்த போதும், அவர் இதை விடவில்லை. ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.

பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான்.

கடந்த 6-ஆம் திகதி இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான்.

இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் அவ்வளவு தான் என்று எண்ணி அவர் லைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார்.தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான்.

இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர். இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது
Previous Post Next Post