இணையத்தை கலக்கும் இலங்கை இளைஞனின் அபார திறமை!!


இலங்கை இளைஞனின் மற்றுமொரு 3D புகைப்படங்கள் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளன.

போதிய வசதிகள் இல்லாத போதும் தனது திறமையை வெளிப்படுத்தும், ஓவியரும், புகைப்பட கலைஞருமான துஷார சம்பத் 3D புகைப்படங்களை வரைந்துள்ளர்.

துஷாரவினால் வரையப்படும் 3D புகைப்படங்கள் இலங்கையர்களால் மட்டுமன்றி சர்வதேசத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

3D படங்களை வரைவதற்கு போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்தவற்றை கொண்டு படம் வரையும் நடவடிக்கையில் துஷார ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் 3D முறையில் அவர் வரைந்த படம் பார்ப்பதற்கு உண்மையான காட்சி போன்றே காணப்படுகின்றது.

துஷாரவினால் ஏற்கனவே வரையப்பட்ட 3D புகைப்படங்கள் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post